Theme Check

இந்தியாவுக்கு இன்னும் ஆபத்து நீங்கவில்லை.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!

இந்தியாவுக்கு இன்னும் ஆபத்து நீங்கவில்லை.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!

இந்தியாவுக்கு இன்னும் ஆபத்து நீங்கவில்லை.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!
X

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்தாலும் ஆபத்து தொடா்ந்து உச்சத்திலேயே இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்தாா்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. மேலும் இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவில் ஒரு சில நகரங்கள் மற்றும் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், ஆபத்து தொடா்ந்து இருந்து வருகிறது. எனவே, பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடா்வதிலும் கவனம் தேவை.

corona

உலகம் தற்போது கொரோனா பாதிப்பின் மத்திய பகுதியில் இருந்து வருகிறது. எனவே, பரவலைக் கட்டுப்படுத்தி, உயிா்களைக் காப்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வழக்கமான நோய் பாதிப்பு நிலையை எட்டிவிட்டது என்றால், அந்த தீநுண்மி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதக் கூடாது.

டெல்டா வகையுடன் ஒப்பிடும்போது, ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக, நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துவதற்குப் பதிலாக மூச்சுக்குழாயின் மேலடுக்கு திசுக்களை இந்த தீநுண்மி பாதிக்கச் செய்வதால், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.

தற்போது வரை, ஒமைக்ரான் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி குறைந்த நோய் எதிா்ப்புத் திறனை அளிப்பதாகவே கருதப்பட்டு வருகிறது. எனவே, பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்துவது, ஒமைக்ரானுக்கு எதிரான நோய் எதிா்ப்புத் திறனை அதிகரிக்கும் என்றே தெரிகிறது, இவ்வாறு பூனம் கேத்ரபால் சிங் கூறினாா்.

newstm.in

Tags:
Next Story
Share it