ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய உலக நாயகன் !!

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய உலக நாயகன் !!

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய உலக நாயகன் !!
X

சாகேத் ராம் என்பவர் கனடாவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு மூன்றாம் கட்ட மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் . சாகேத் கமலின் தீவிர ரசிகர் என்பதால் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார். இதையடுத்து அவருடைய சுற்று வட்டாரங்கள் கமலஹாசனை சந்திக்க உதவி செய்யுமாறு சமூகவலைதளங்களில் உதவி கோரினர்.

வீடியோ காலில் கமலஹாசன் பேசிய போது, முதலில் சாகேத் நம்பவில்லை. பின்னர் கமல்ஹாசன் உண்மையிலே பேசுகிறார் என்றதும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார். சாகேத் கமல்ஹாசனுடன் மிகவும் கலகலப்பாக பேசினார். 10 நிமிடங்களுக்கு மேலாக அவருடைய குடும்பத்தினருடன் கமல்ஹாசன் உரையாடினார் அவரது உடல்நிலை குறித்து கேட்டு அறிந்ததுடன் தனது சினிமா மற்றும் அரசியல் அனுபவங்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டார்.

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகர் ஒருவருக்கு கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:
Next Story
Share it