Theme Check

உலக நம்பர்-1 பணக்காரராக மீண்டும் ஜெஃப் பெசாஸ்.. எலோன் மஸ்க் பின்னடைவு !

உலக நம்பர்-1 பணக்காரராக மீண்டும் ஜெஃப் பெசாஸ்.. எலோன் மஸ்க் பின்னடைவு !

உலக நம்பர்-1 பணக்காரராக மீண்டும் ஜெஃப் பெசாஸ்.. எலோன் மஸ்க் பின்னடைவு !
X

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இருவருக்கு இடையே இப்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையே தான் இந்த போட்டி.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தில் 3 ஆண்டுகளாக பெசாஸ் இருந்த நிலையில் அவரை எலோன் மஸ்க் கடந்த மாதம் அகற்றினார்.

இந்நிலையில் தற்போது 191.2 பில்லியன் டாலர்கள் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்துக்குச் சென்றார். டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் 2ஆம் இடத்துக்குப் பின்னடைவு கண்டதாக புளூம்பர்க் பில்லியனர் இண்டெக்ஸ் கூறுகிறது.

டெஸ்லா பங்குகள் பங்குச்சந்தையில் நேற்று 2.4% குறைந்ததையடுத்து எலோன் மஸ்க்கின் சொத்து 4.6 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதனையடுத்து 2ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆன்லைன் புக் ஸ்டோராக 1995ல் அமேசானைத் தொடங்கினார் பெசாஸ். இப்போது 1.7 ட்ரில்லியன் டாலர்கள் பெறுமான இ-காமர்ஸ் ஜெயண்ட்டாக உருவெடுத்துள்ளது அமேசான்.

இப்போது டெல்சாவைக் காட்டிலும் பெசாஸ் 995 மில்லியன் டாலர்கள் கூடுதலாக சொத்துடையவராகி டெல்சா நிறுவனர் மஸ்க்கைப் பின்னுக்குத் தள்ளினார். எலான் மஸ்கிற்கு அடுத்தபடியாக பில் கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மார்க் சூக்கர்பேர்க் உள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it