Theme Check

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! இந்தியாவை எதிர்கொள்ள நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! இந்தியாவை எதிர்கொள்ள நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! இந்தியாவை எதிர்கொள்ள நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!
X

முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. 9 அணிகள் பங்கேற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த இரு அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது.

சமீபத்தில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றுள்ளநிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உற்சாகமாக களமிறங்குகிறது. இந்தியாவும் இந்தப் போட்டியில் வெல்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 20 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இந்த 15 பேர் கொண்ட அணி உறுதி செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில், இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், டேவன் கான்வே, கிராண்ட்ஹோம், மேட் ஹென்ரி, ஜேமிசன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், வில் யங்.


முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு கோப்பையுடன் ரூ.11¾ கோடி பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் சாம்பியன் மற்றும் 2-வது இடம் பெறும் அணிக்கு வழங்கப்படக்கூடிய பரிசுத் தொகையை மொத்தமாக சேர்த்து இரு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும்.

newstm.in

Tags:
Next Story
Share it