போதையில் விரலை கடித்து துப்பிய நபர்! கோவையில் பரபரப்பு!!
போதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் விரலை துண்டாக கடித்து துப்பிய நபர்..!

கோவையில் இரு குடிகாரர்கள் மது போதையில் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டதோடு ஒருவர் மற்றொரு நபரின் விரலை கடித்து துப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கோவை புலியகுளம் பங்கஜா மில் அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மது போதையில் இரு குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். நீண்ட நேரமாக குடிகாரர்கள் இருவரும் சண்டையிட்டனர். அவர்கள் எப்போதும் போதையில் இவ்வாறு நடந்துகொள்வது வாடிக்கைதான் என கூறும் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. மாறாக சண்டை போடுவதை சுற்றிநின்று பார்த்தனர்.
இதனால் ஒருகட்டத்தில் ஒருவர் மற்றொருவரின் விரலை கடித்து துப்பினார். விரல் பகுதி மட்டும் தனியாக விழுந்த நிலையில் அங்கிருந்த பொது மக்கள் அவர்கள் இருவரையும் அங்கிருந்து விரட்டி விட்டனர். மது போதையில் இரு குடிகாரர்களும் சண்டையிடுவதும், விரல் துண்டாக கீழே கிடப்பது போன்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதில் குடிபோதையில் சண்டையிடுவது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இராமநாதபுரம் காவல் துறைக்கு புகார்கள் எதுவும் வரவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவித்தாலும், சம்பவம் நடந்த இடத்தில் இரு போதை நபர்கள் போதையில் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டதை அந்த பகுதி மக்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.
newstm.in


