Theme Check

தொடக்க பள்ளிகளில் குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு தடை !!

தொடக்க பள்ளிகளில் குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு தடை !!

தொடக்க பள்ளிகளில் குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு தடை !!
X

ஆறு மற்றும் ஏழு வயது குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிரடியாக கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் தொடக்கக்கல்வி முதல் கல்லூரிப்படிப்புகள் வரை தொடர்ந்து தேர்வெழுத வேண்டியுள்ளது. ஆனால், இந்த அழுத்தம் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக சீனா கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

china school

இது தொடர்பாக சீன கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளிக் கல்வியின் தேர்வுகள் ஒரு அவசியமான பகுதியாகும். ஆனால் சில பள்ளிகளில் அதிகப்படியான தேர்வுகள் போன்ற பிரச்சினைகள் உள்ளன, இது மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துகிறது, இது சரிசெய்யப்பட வேண்டும் என தெரிவித்தது.

china school

தற்போதைய புதிய விதிகளின்படி சீனாவில் பள்ளிப்படிப்பில் ஒரு பருவத்திற்கு உரிய தேர்வு மற்றும் தேர்வுகளின் எண்ணிக்கைகள் குறித்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடக்கப் பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் காகித அடிப்படையிலான தேர்வுகள் தேவையில்லை. உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் வாராந்திர தேர்வுகள், யூனிட் தேர்வுகள், மாதாந்திர தேர்வுகள் போன்றவற்றிற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it