Theme Check

இந்தியாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா.. குஜராத்தில் பதிவானதாக தகவல்..!

இந்தியாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா.. குஜராத்தில் பதிவானதாக தகவல்..!

இந்தியாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா.. குஜராத்தில் பதிவானதாக தகவல்..!
X

குஜராத்தில் ஒருவருக்கு XE வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நபர் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக, இந்தியாவில் முதல் நபருக்கு XE வகை கொரோனா இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால், அவரின் ஜீனோம் சோதனையில் அப்படி எந்த முடிவும் வரவில்லை என்று இந்திய ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு கூறியது. இதே தகவலை மத்திய சுகாதாரத் துறையும் மறுத்தது.

மும்பையில் உள்ள அந்தப் பெண்ணுக்கு XE கொரோனா ஏற்பட்டதா இல்லையா என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில், குஜராத்தில் ஒருவருக்கு XE வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘குஜராத்தில் எடுக்கப்பட்ட கொரோனா மாதிரி தேசிய நோய்க் கட்டுப்பாட்டு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் செய்யப்பட்ட ஜீன் சோதனையில், அந்த நோயாளிக்கு XE கொரோனா தாக்கி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

XE கொரோனா நோயாளிகளுக்கு உள்ள ஜீன் அவரின் கொரோனா மாதிரியில் இருந்துள்ளது. மும்பையில் XE கொரோனா ஏற்பட்டதாக சொல்லப்பட்டவரின் ஜீனை விட இவருக்குத்தான் XE கொரோனாவுடன் அதிக ஒற்றுமை இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபர் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

இந்த தகவலை, குஜராத்தில் உள்ள ஜீனோம் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஆனால், தேசிய ஜீனோம் கழகமோ, மத்திய அரசோ இன்னும் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it