அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் யாமி கௌதம்..!!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் யாமி கௌதம்..!!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் யாமி கௌதம்..!!
X

தமிழில் கௌரவம் படத்தில் நடித்தவர் யாமி கௌதம். அதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தியில் பல படங்களில் கதாநாயகியாகவும் இவர் நடித்துள்ளார்.

நடிகை யாமி கௌதமுடைய தனியார் வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணம் எப்படி வந்தது என்பது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு யாமி கௌதம் தரப்பில் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க மத்திய அமலாக்கத் துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் யாமி கௌதம் மீது இரண்டாவது முறையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நடிகைக்கு வழங்கப்பட்ட இரண்டாவது சம்மன் இது ஜூலை 7-ம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இவர் சமீபத்தில் இயக்குநர் ஆதித்யாவை என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Tags:
Next Story
Share it