யப்பா ! சிறிய ஊசிக்கு இந்த நடிகைக்கு இப்படியோரு பயம் இருக்கா ? (வீடியோ)

யப்பா ! சிறிய ஊசிக்கு இந்த நடிகைக்கு இப்படியோரு பயம் இருக்கா ? (வீடியோ)

யப்பா ! சிறிய ஊசிக்கு இந்த நடிகைக்கு இப்படியோரு பயம் இருக்கா ? (வீடியோ)
X

கொரோனா தடுப்பூசியை மிகுந்த அச்ச உணர்வுடன் செலுத்திக்கொண்ட நடிகை ராய் லட்சுமி வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வருபவர் ராய் லட்சுமி. ராய் லட்சுமி 2005ஆம் ஆண் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் வெள்ளித்திரை, தாம் தூம், மங்காத்தா, நான் அவனில்லை 2, பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது பிரபலங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் ராய் லட்சுமி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். ஆனால் வீடியோ பார்த்துட்டு நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

ஊசி பயம் கொண்டவர் ராய் லட்சுமி. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது மிகவும் பயந்து போய் தனது கண்களை மூடிக்கொண்டார். ஊசி குத்தி முடித்தபோது அழும் நிலைமைக்குச் சென்றார்.

இன்ஸ்டகிராமில் இதன் விடியோவைப் பகிர்ந்துள்ள ராய் லட்சுமி, நிஜமாகவே டிரிபனோபோபியா (Trypanophobia) என்கிற ஊசி பயம் எனக்கு உண்டு. ஊசி செலுத்திக்கொள்வது எனக்குச் சாதாரண விஷயமில்லை. ஆனாலும் இதைச் செய்துகொண்டேன். வீடியோவைப் பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கலவையான கமாண்ட் செய்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it