#BREAKING:- கேரளாவில் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ !!
#BREAKING:- கேரளாவில் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ !!

கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகள் கடந்த மே மாதம் அதிகபட்சமாக நான்கு லட்சத்தைக் கடந்தது.மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமலும் சரியான நேரத்தில் வென்டிலெட்டர் உதவிகள் கிடைக்காமலும் கொரோனா நோயாளிகள் பலியான அவலங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவுடன் புயலும் அவ்வப்போது பொதுமக்களை கலங்கடித்து வருகிறது. அந்த வகையில் மத்திய கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது.
யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா – மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் 26 ஆம் தேதி பிற்பகல் பாரதீப் -சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தகவலின்படி,யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

