கருப்பு, வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய்.. இந்தியாவுக்கு மேலும் ஆபத்து!
கருப்பு, வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய்.. இந்தியாவுக்கு மேலும் ஆபத்து!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது அதில் இருந்து மீள்வதற்கு முடியாமல் மக்கள் பெரும் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் இந்திய அளவில் தினசரி பாதிப்பு இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இந்தியாவில் பரவி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, குஜராத், ராஜன்தான் என பெரும்பாலான மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளை பூஞ்சை நோயும் சில மாநிலங்களில் கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு எதிராகவும் மருத்துவ உலகம் கடுமையாக போராடி வருகிறது.

இந்தநிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது வெள்ளை மற்றும் கருப்பு பூஞ்சை நோயை காட்டிலும் மிகவும் அபாயகரமான நோயாக அறியப்படுகிறது.
சோம்பல், பசியின்மை மற்றும் உடல் எடை இழப்பு ஆகியவை இந்த மஞ்சள் பூஞ்சை நோயின் அறிகுறிகளாக சொல்லப்பட்டுள்ளது. சில நோயாளிகளுக்கு இந்த பூஞ்சையினால் சீழ் வடிவது, காயம் குணமடைய காலம் பிடிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் கண்களில் பாதிப்பு வரை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாம்.

இந்த மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் முறையான சிகிச்சை பெற்றால் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் எனவும் மருத்துவர்கள் சொல்கின்றனர். சுத்தமில்லாத சுற்றுப்புற சூழல் தான் இந்த நோய் பாதிப்பு ஏற்பட காரணம் என சொல்லப்பட்டுள்ளது.
newstm.in

