யாருப்பா இந்த டாக்டர்.. தடுப்பூசி போடும்போது கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? வைரல் வீடியோ
யாருப்பா இந்த டாக்டர்.. தடுப்பூசி போடும்போது கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? வைரல் வீடியோ

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக உள்ளது.
இந்தியாவில் வயதுவாரியாக ஒவ்வொரு கட்டங்களாக முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், வருகிற மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி மையங்களுக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும், இதன்மூலம் தடுப்பூசி மையங்களிலிருந்து கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் சுகாதார பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வீடியோ ஒன்றை மும்பையைச் சேர்ந்த மருத்துவர் துஷார் ஷா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மருத்துவர் துஷார் ஷா கூறியிருப்பதாவது, தடுப்பூசி மையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் நமக்கு தடுப்பூசி செலுத்துகிறார்கள். தடுப்பூசி மையங்களில் கூடும் கூட்டத்திலிருந்து நமக்கு கொரோனா பரவலாம். தடுப்பூசியை மட்டும் செலுத்திக்கொள்ளுங்கள்; வைரஸை அல்ல.

அதை எப்படி செய்வது என்பதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு மாஸ்க்குகளை அணியவேண்டும், கையுறைகளை அணிந்துசெல்லுங்கள். இது முகத்தைத் தொடுதல் மற்றும் கைக்குலுக்குதல் ஆகியவற்றை தடுக்கும், கையுறைகளுக்கு மேல் சானிடைசர்களைப் பயன்படுத்துங்கள், பேசுவதை தவிருங்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வெளியே சென்று டீ, காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும் எனவும், தடுப்பூசி மையங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில் தனது கையில் ஏந்திய பதாகைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
'How to get the vaccine and not the virus when you visit the vaccination centre', by Dr.Tushar Shah (Physician, Mumbai). pic.twitter.com/p1aw8RCFZH
— Zucker Doctor (@DoctorLFC) April 24, 2021
newstm.in

