நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்..!! எப்படி செய்வது தெரியுமா ?
நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்..!! எப்படி செய்வது தெரியுமா ?

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன்படி, ஜூலை 17-ம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 20-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது என்றும், https://neet.nta.nic.in என்ற வலைத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 543 நகரங்களில் நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நுழைவுச் சீட்டு மூலம், மாணவர்கள் தேர்வு மையங்கள், இடம் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தொடர்பான விவரங்களை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்தந்த தேர்வு மையத்தில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

