Theme Check

வீட்டில் இருந்தே ரூ.50,000 சம்பாதிக்கலாம்.. மத்திய அரசு தரும் செம ஆஃபர் !!

வீட்டில் இருந்தே ரூ.50,000 சம்பாதிக்கலாம்.. மத்திய அரசு தரும் செம ஆஃபர் !!

வீட்டில் இருந்தே ரூ.50,000 சம்பாதிக்கலாம்.. மத்திய அரசு தரும் செம ஆஃபர் !!
X

கொரோனா பாதிப்பால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மனதளவில் பாதிப்பு ஏற்பட்டும் வேலையின்மை, நிதி நெருக்கடி போன்ற சிக்கலில் மாட்டியுள்ளனர். அரசு சார்பில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டாலும் அதனால் முழுமையான அளவில் பூர்த்தி செய்திட முடியாது என பலரும் கூறுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் உங்களுக்கு அரிய வாய்ப்பாக வீட்டில் இருந்தப்படியே நீங்கள் 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்கான வாய்ப்பை மத்திய அரசே ஏற்படுத்தியுள்ளது. அதாவது, லோகோ வடிவமைப்புக்கான ஒரு சிறப்பு போட்டி மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மத்திய அரசால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்துக்கு ஒரு லோகோவை வடிவமைத்துத் தருவதற்கான போட்டிதான் இது. இதுகுறித்த தகவல்கள் ’மை கோவ் இந்தியா’வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க நீங்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 50,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசு வென்ற போட்டியாளருக்கு 50,000 ரூபாயுடன் போட்டியின் இ-சான்றிதழ் வழங்கப்படும். அதே நேரத்தில், மூன்று பங்கேற்பாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

myGov.in போர்ட்டலுக்கு சென்று இதற்காகப் பதிவு செய்யவேண்டும். இந்த லோகோ வடிவமைப்பு போட்டியில் எந்த வயதினரும் பங்கேற்கலாம். லோகோவின் வடிவம் JPEG, BMP அல்லது TIFF வகைகளில் 600 dpi ரிசொலுசனுடன் இருக்க வேண்டும். இந்த லோகோ இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். லோகோ பற்றிய தகவல்கள் 100 வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it