ரூ.1,000 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்!!
ரூ.1,000 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்!!

குடியரசு தினத்தை முன்னிட்டு கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தள்ளுபடி விலையில் டிக்கெட் விற்பனை செய்கிறது.
அதன்படி, 1000 ரூபாய் டிக்கெட் கட்டணத்துக்குள் விமானத்தில் பயணிக்க கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அனுமதிக்கிறது. அதாவது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் 926 ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்கிறது.
Right to Fly எனப்படும் இச்சலுகையின் கீழ் 926 ரூபாயில் இருந்து விமான டிக்கெட் கட்டணம் தொடங்குகிறது. சலுகையின் பலன்களை முழுமையாக பெற வேண்டுமெனில் ஜனவரி 26ஆம் தேதிக்குள் டிக்கெட் புக் செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சலுகையின் கீழ் பிப்ரவரி 11 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்துக்கும் விமான டிக்கெட்டுகளை புக் செய முடியும். மேலும், இச்சலுகை one-way பயணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும், இந்த சலுகையை உள்நாட்டு பயணத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு இந்த சலுகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

