Theme Check

கையால் தொடாமல் கம்ப்யூட்டரை இயக்கலாம்.. பரிசோதனையை தொடங்கவுள்ளார் எலான் மஸ்க்..!

கையால் தொடாமல் கம்ப்யூட்டரை இயக்கலாம்.. பரிசோதனையை தொடங்கவுள்ளார் எலான் மஸ்க்..!

கையால் தொடாமல் கம்ப்யூட்டரை இயக்கலாம்.. பரிசோதனையை தொடங்கவுள்ளார் எலான் மஸ்க்..!
X

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

விண்வெளிக்கு சுற்றுலா பயணம், தானாக இயங்கும் கார் என பல புதுமையான கண்டுபிடிப்புகளை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
Elon Musk wants to wire your brain to the internet – what could possibly go  wrong?
மனித மூளையை இயந்திரங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நியூராலிங்க் என்ற நிறுவனத்தில் மிகப் பெரிய முதலீட்டை எலான் மஸ்க் செய்துள்ளார். இந்த தொழில்நுட்பம் மூலம் மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும்.

அதை கம்ப்யூட்டர் அல்லது செல்போன் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். இந்த சாதனங்களை கையால் தொடாமல் நினைவுகள் மூலம் இயக்க முடியும். மேலும், மனித மூளை நினைப்பதை இந்த சாதனங்களில் பதிவு செய்ய முடியும். மூளையில் ஏற்படும் பாதிப்புகளை இந்த சிப் உதவியால் சரி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2017-ல் இந்த ஆய்வு குறித்து எலான் மஸ்க் அறிவித்தார். அந்த நிறுவனம், பன்றிகள் மற்றும் குரங்குகளில் இந்த பரிசோதனையை செய்துள்ளது. தற்போது, மனிதர்கள் மூளையில் சிப்களை பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளை துவக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மருத்துவ நிபுணர்களை பணியில் அமர்த்த இந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. விரைவில், உரிய அனுமதி பெற்று மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it