Theme Check

விபத்தில் சிக்கிய இளம் நடிகர்! லட்சங்களில் குவியும் உதவித் தொகை!

விபத்தில் சிக்கிய இளம் நடிகர்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராட்டம்.!

விபத்தில் சிக்கிய இளம் நடிகர்! லட்சங்களில் குவியும் உதவித் தொகை!
X

மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான, பதினெட்டாம் படி படத்தில் சோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் நகுல் தம்பி.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி, பிருத்விராஜ், ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர். 20 வயதான நகுல் அடுத்து சில மலையாள திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி பயங்கர விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் இவருக்கு மூளை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை சிகிச்சைக்காக 7 லட்சம் செலவு செய்தும் இன்னும் அவர் கண் விழிக்கவில்லை. இந்த விபத்தில் இவருக்கு மூளை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பதினைந்து நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், ரூ.12 லட்சம் வரை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் குடும்பத்தார் சமூக வலைதளங்களில் நகுலுக்காக பண உதவி கேட்டு வருகின்றனர். இதனை அடுத்து நகுலின் குடும்பத்தினர் மற்றும் நடிகை அஹானா கிருஷ்ணா, அவரது நண்பர்கள் சமூக வலைத்தளம் மூலமாக பணம் திரட்டி வருகின்றனர். மேலும், இதுவரை 24 லட்சத்திற்கு மேல் பண உதவி வந்து சேர்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய இளம் நடிகர்! லட்சங்களில் குவியும் உதவித் தொகை!

விபத்தில் சிக்கிய இளம் நடிகர்! லட்சங்களில் குவியும் உதவித் தொகை!

newstm.in

Tags:
Next Story
Share it