நீண்டகால வெளிநாட்டு காதலியை திருமணம் செய்த இளம் நடிகர்.. கொரோனாவால் யாருக்கும் அழைப்பு இல்லை !!
நீண்டகால வெளிநாட்டு காதலியை திருமணம் செய்த இளம் நடிகர்.. கொரோனாவால் யாருக்கும் அழைப்பு இல்லை !!

லிஜோ ஜோஸ் இயக்கிய அங்கமாலி டைரீஸ் மலையாள படம் மூலம் நடிகரானவர் ஆண்டனி வர்கீஸ் . அவரும், அனிஷா பாலோஸ் என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதால் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அங்கமாலியில் நடந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் வேறு யாரையும் அழைக்கவில்லை என நடிகர் ஆண்டனி வர்கீஸ் தெரிவித்தார். இந்நிலையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ஆண்டனி, அனிஷாவை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அனிஷா வெளிநாட்டில் நர்ஸாக வேலை செய்கிறார். அனிஷாவுக்கும், ஆண்டனி வர்கீஸுக்கும் சிறு வயதில் இருந்தே பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருந்தார் ஆண்டனி வர்கீஸ். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போகவே அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டனி வர்கீஸ் கையில் தற்போது நான்கு மலையாள படங்கள் இருக்கிறது. இதனால் மலையாள திரையுலகில் மெச பிஸியாக அவர் இருக்கிறார்.
newstm.in

