வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் ஆடை வடிவமைப்பாளர்!!
வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் ஆடை வடிவமைப்பாளர்!!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்கெடுக்கப்பட்டுள்ளார்.
பிரத்யுஷா கரிமெல்லா அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் ஆடை வடிவமைப்பாளர் பணியைத் தொடங்கினார். அவர் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர் - நடிகைகளிடமும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பிரத்யுஷா சடலமாக கண்கெடுக்கப்பட்டார். அவரது அறையில் கார்பன் மோனாக்சைடு பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை அவர் சுவாசித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரத்யுஷா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in

