Theme Check

பொற்கோயிலில் பரபரப்பு.. அத்துமீறி நுழைந்த இளைஞர் அடித்துக் கொலை !!

பொற்கோயிலில் பரபரப்பு.. அத்துமீறி நுழைந்த இளைஞர் அடித்துக் கொலை !!

பொற்கோயிலில் பரபரப்பு.. அத்துமீறி நுழைந்த இளைஞர் அடித்துக் கொலை !!
X

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்துசெல்வர். இந்த நிலையில் பொற்கோயிலில் நேற்று மாலை பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப்பகுதிக்குள் ஒருவர் திடீரென குதித்துள்ளார். அதோடுமட்டுமல்லாமல் அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளையும் அந்நபர் எடுக்க முற்பட்டார்.

இந்த சம்பவம் கோயிலில் இருந்த டிவியில் ஒளிபரப்பானதால், இதனை பார்த்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொற்கோயில் நிா்வாகக் குழுவினா், அவரைப் பிடித்து தங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். அப்போது, கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக, அவரை அங்கிருந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனா்.

child-death

ஏராளமானோர் சுற்றி வளைத்து தாக்கியதில் அந்நபர் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்துள்ளது.

newstm.in

Next Story
Share it