தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய இளைஞர்!!
தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய இளைஞர்!!

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்து இளைஞர் ஒருவர் மரத்தின் மீது ஏறிக் கொண்ட காட்சி வெளியாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் 100% தடுப்பூசி செலுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் கோனேரிக்குப்பம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களின் விவரங்களை சேகரித்தனர்.
அப்போது 40 வயது இளைஞர் ஒருவர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என கூறி அங்கு உள்ள மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் மரத்தின்மேல் கத்தியுடன் 40 வயது ஆண் அமர்ந்து இருந்தார். அவர் தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவர அவரை போட்டுக் கொண்டு கீழே இறங்கி வருமாறு சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் அந்த நபர், தடுப்பூசி போட மாட்டேன்.. உங்ககிட்ட சிக்க மாட்டேன்” என கூறி மறுத்து மேலேயே தங்கிவிட்டார். சுகாதார ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டும் அவர் வரவில்லை.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
newstm.in

