காலை, இரவில் ஃபாலோ செய்யும் இளைஞர்.. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார் !!
காலை, இரவில் ஃபாலோ செய்யும் இளைஞர்.. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார் !!

பிரபல ஆர்.ஜே.வான வைஷ்ணவி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ரேடியோ ஜாக்கி ஆக இருந்து பிரபலமான இவர், பிக்பாஸ் மூலம் மேலும் மக்களிடம் பிரபலமானார். இதனால் இவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில், இளைஞர் ஒருவர் குறித்து இவர் கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அடையாளம் தெரியாத இளைஞரை ஒருவர், பைக்கில் பின்தொடர்ந்து வருவதாகவும், வீட்டின் வாசலுக்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் வீடியோ பதிவிட்டு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேலும் தன் வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது மிரட்டும் விதமாக பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தான் தங்கியிருக்கும் வீட்டை இளைஞர் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காக 30 நிமிடம் வீட்டுக்கு செல்லாமல் பதட்டத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த இளைஞருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தனக்குத் தொந்தரவு தந்த அந்த நபர் குறித்து புகார் அளிப்பதற்காக செல்போன் பேசுவது போல் வீடியோ படம் எடுத்து வெளியிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தபோது, அந்த நபர் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டாம் எனவும், பழிவாங்கும் நோக்கில் ஆசிட் வீசினால் என்ன செய்வது என்று அச்சத்துடன் கேட்டதாக தெரிவித்துள்ளார். புகார் அளிக்காமல் இருப்பதால் மீண்டும் அந்த அடையாளம் தெரியாத நபர் தொந்தரவு செய்யாமல் இருப்பாரா? அல்லது வேறு ஏதேனும் பெண்ணிற்கு இதுபோன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

சென்னை காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தை இணைத்து இந்த புகாரை தெரிவித்துள்ளார். இவ்வாறு புகார் அளித்த வைஷ்ணவிக்கு, தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு புகார் அளித்ததற்கு காவல்துறை தரப்பில் இருந்து சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது . மேலும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவல் உதவி என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளது.
இதனையடுத்து அந்நபர் குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். இதேபோல் அண்மையில் பிரபல பைக் ரேஸசரான இளம்பெண் ஒருவரை நன்ளிரவில் பின்தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் குறித்து அவர் சமூகவலைதளம் மூலம் புகார் தெரிவித்திருந்தார். பின்னர் விசாரணை நடத்திஅந்நபரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
I am very impressed with @chennaipolice_. Almost immediate response and now they are in touch to get all details and identify the license plate number. Im so glad to see our Chennai police step up like this. https://t.co/LZStZx6dM9
— Valia (@Vaishnavioffl) June 13, 2022
newstm.in

