சாலை விபத்தில் உயிருக்குப் போராடிய இளைஞர்... முதலுதவி கொடுத்து சுவாசத்தை மீட்ட போலீஸ்!!
சாலை விபத்தில் உயிருக்குப் போராடிய இளைஞர்... முதலுதவி கொடுத்து சுவாசத்தை மீட்ட போலீஸ்!!

தெலுங்கானா மாநிலம் பொம்மக்கலைச் சேர்ந்த அப்துல்கான் என்பவர், பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அப்துல்கான் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கலீல், உடனடியாக சி.பி.ஆர் எனப்படும் மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் முதலுதவியை செய்தார். சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அப்துல் கானுக்கு சுவாசம் திரும்பி, கை, கால்களில் அசைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆம்புலனஸ் வரவழைக்கப்பட்டு அப்துல்கான் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர் கலீலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Words may not describe the constable's urge to save a life.
— P Pavan (@PavanJourno) June 24, 2021
Kudos to Khalil, the cop with a heart. Pray the injured youth would come out of the hospital soon to give Khalil a warm hug.
Karimnagar, #Telangana pic.twitter.com/avDMy2TYHb

