Theme Check

மாடு திருடிய இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை!!

மாடு திருடிய இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை!!

மாடு திருடிய இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை!!
X

உத்தரபிரதேசத்தில் மாடு திருடிய வழக்கில் கைதான இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்திய காவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாடு திருடிய வழக்கு தொடர்பாக படாவுன் காவல்துறையினரால் தினசரி கூலித் தொழிலாளியான ரெஹான் என்ற 20 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மே 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ரெஹான் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். அவரை மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் போலீசார் கைது செய்தனர்.

cow theft1

ரெஹானிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக ரெஹானின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசின் விசாரணைக்குபின் பலத்த காயம் அடைந்த ரெஹானால், நடக்கவோ, பேசவோ முடியவில்லை.

போலீஸ்காரர்கள் அவருக்கு மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். அவரை அடிப்பதற்கு ஒரு குச்சியைப் பயன்படுத்தியதால் அவரது அந்தரங்க பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் காவலர்கள் 7 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it