Theme Check

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து லைவ்-ஆக ஒளிபரப்பிய இளைஞர்கள்.. நின்றுபோன கல்யாணம் !

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து லைவ்-ஆக ஒளிபரப்பிய இளைஞர்கள்.. நின்றுபோன கல்யாணம் !

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து லைவ்-ஆக ஒளிபரப்பிய இளைஞர்கள்.. நின்றுபோன கல்யாணம் !
X

மகாராஷ்டிரா மாநிலம் குவாலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, 20 வயது இளைஞர் ஒருவர் அறிமுகமானார். பின்னர் இருவரும் அடிக்கடி பேசி காதலில் விழுந்த நிலையில், இருவரும் நெருங்கி பழகிவந்தனர். அவ்வப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில், இளைஞர் தனது காதலியை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றான். அவனுடன் நண்பன் ஒருவனும் சென்றான். ஒரே அறையில் மூவரும் இருந்தபோது, தனது காதலியிடம் நண்பனுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு காதலன் வற்புறுத்தினான். இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தாள். இதனால் 2 பேரும் சேர்ந்து அப்பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.

rape

இதனால் பயந்து போன அந்த இளம்பெண் இதுபற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக அப்பெண்ணை தனியாக அழைத்து பலநேரங்களில் பாலியல் சித்ரவதை செய்து வந்தனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்து மிரட்டி வந்துள்ளனர்.

அதில் ஒருவன் அந்த பெண்ணை காதலன் பாலியல் வன்கொடுமை செய்வதை மற்றொரு நண்பர்களுக்கு செல்போனில் 'லைவ்' ஆக காட்டினான். இதனை அவர்கள் பார்த்து ரசித்து வந்தனர். அதை அறிந்த அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர்.

rape

இந்தநிலையில் அவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். மாப்பிள்னை பார்த்து நிச்சயமும் செய்தனர். இந்த சூழ்நிலையில் இதை அறிந்த காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். அதன் பிறகுதான் இளம்பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it