Theme Check

விஐபிகளுக்கு இளம்பெண்கள் சப்ளை! அதிமுக பெண் பிரமுகர் கைது!

இளம்பெண்கள் சப்ளை.. விபச்சார தொழிலில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகிக்கு சிக்கல்..

விஐபிகளுக்கு இளம்பெண்கள் சப்ளை! அதிமுக பெண் பிரமுகர் கைது!
X

ஆம்பூரில் இளம்பெண்களை விஐபிகளுக்கு சப்ளை செய்து விபச்சார புரோக்கரமாக செயல்பட்டு வந்த அதிமுகவைச் சேர்ந்த பிரேமா என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் தனி வீடுகளில் வெளிமாநிலத்தில் இருந்து அழகிகளை அழைத்து பாலியல் தொழில் நடப்பதாக புகார் எழுந்தது. விஐபிகளுக்கு இளம்பெண்களை, 18 வயது எட்டாத சிறுமிகளையும் சப்ளை செய்து கொண்டு விபச்சாரம் செய்கிறார்கள் என்கிற ரகசிய தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. அதோடு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் பகுதிகளுக்கும் பெண்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விஐபிகளுக்கு இளம்பெண்கள் சப்ளை! அதிமுக பெண் பிரமுகர் கைது!

இது தொடர்பாக விசாரணை நடத்தியப்போது அதே பகுதியை சேர்ந்தவரும், அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ள பிரேமா என்பவர் தான், இளம்பெண்களை அழைத்து வந்து தொழில் செய்கிறார் என்பது தெரிவந்தது. இவர் உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வந்தார். இதனையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் பிரேமாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விஐபிகளுக்கு இளம்பெண்கள் சப்ளை! அதிமுக பெண் பிரமுகர் கைது!

மேலும், அவரிடமிருந்து பெங்களூருவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை மீட்டுத் திருப்பத்தூர் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரேமா நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

newstm.in

Tags:
Next Story
Share it