Theme Check

கொரோனாவால் கை, கால்களை இழந்த இளம் பெண்! கண்ணீர் விட்டு அழுத மருத்துவர்: வெளியிட்ட வீடியோ..!!

கொரோனாவால் கை, கால்களை இழந்த இளம் பெண்! கண்ணீர் விட்டு அழுத மருத்துவர்: வெளியிட்ட வீடியோ..!!

கொரோனாவால் கை, கால்களை இழந்த இளம் பெண்! கண்ணீர் விட்டு அழுத மருத்துவர்: வெளியிட்ட வீடியோ..!!
X

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் பரவி கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாங்கியுள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா பரவிய போது, நூரையீரல் தான் முதலில் பாதிக்கப்பு ஏற்படுவதாக நம்பப்பட்டது. ஆனால், அதன்பின் இந்த வைரஸின் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இதற்கு தடுப்பூசி தான் தீர்வு என்பது தெரியவர, உடனே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் டென்னசி மாகாணம் நாஷ்வில் நகரைச் சேர்ந்த மருத்துவர் வெஸ்லி எலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா வைரஸ் எவ்வளவு பெரிய அழிவுகரமானது, கொரோனா ஒரு பெண்ணின் கை மற்றும் கால்களை எடுத்துக் கொண்டது. மக்கள் தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

32 வயதான அந்த பெண், தடுப்பூசி போட்டுக்கொள்ள மற்றவர்களுக்கு என்னுடைய கதை உதவும் என்று கெஞ்சிய பின்னரே இதை பதிவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண், எனக்கு இந்த வீடியோவை அனுப்பினாள்.

அதை பார்த்தவுடன் அழுதுவிட்டேன். அதில், அவள் புதிய செயற்கை கால்களுடன் நடந்து வந்தார். கொரோனா என்பது உங்கள் நுரையீரல், இதயம், மூளை அல்லது எந்த உறுப்பையும் பாதிக்கும் இரத்த நாளங்களின் நோய் ஆகும்.

இரத்தம் உறைதல் ஏற்பட்டால் உடலில் முக்கிய பாகங்களின் உயிர் உறிஞ்சப்படுகிறது. இதனால் அது செயலற்று போய்விடும். அப்படிதான், கொரோனாவால் இந்த பெண் பாதிக்கப்பட்ட போது, அவரது கைகள் மற்றும் கால்களில் இரத்த அடைப்பு ஏற்பட்டது.

இந்த கடுமையான பாதிப்பின் காரணமாக, அவருக்கு உடலில் காயம் போன்ற புண்கள் வந்தன. இதனால் அந்த காயங்களை சரி செய்ய ஒவ்வொரு நாளும் அவருக்கு பல மணி நேரம் சிகிச்சை தேவைப்பட்டது.

ஆனால், அதுவே நாட்கள் செல்ல, செல்ல கை மற்றும் கால்களை துண்டித்தால் தான் அவருக்கு பாதுகாப்பானது என்பது தெரியவந்த பின்னரே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இதைப் பார்த்து அழுத நான், அதன் பின் அவரின் உடல் உறுதியும், மன உறுதியும் எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தாக கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அவர் இந்த வீடியோவை பதிவிட சொன்னதற்கு முக்கிய காரணமே மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான், அப்படி இல்லையென்றால் இவரைப் போன்று நிலை ஏற்படலாம். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:
Next Story
Share it