PUBG விளையாடி பொழுதை கழித்த இளைஞர் கைது! பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்..
PUBG விளையாடி பொழுதை கழித்த இளைஞர் கைது! பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்..

வேலைக்குப் போகாமல் பப்ஜி விளையாடி வந்த இளைஞர், பணம் தரவில்லை என பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடி அடுத்த கண்ணபாளையம் பகுதியை சேர்ந்த மல்லிகா கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி இரவு தூங்கச் சென்ற மூதாட்டி நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்காததால், மதியம் ஒரு மணி அளவில் அருகில் உள்ளவர்கள் வீட்டைத் திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்து ரத்த வாடை வந்தது அறிந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்த போது, மல்லிகா ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கணவர் இராணுவத்தில் இருந்ததால், அதன் மூலம் கிடைக்கும் மதுவை வாங்கி குடித்துவந்துள்ளார். பின்னர், மல்லிகாவின் இறப்பு குறித்து அறிந்தும், அயனாவரத்தில் வசித்துவரும் சேர்ந்த உறவினர் தங்கை குடும்பத்தில் யாரும் வாராதது குறித்து காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. குறிப்பாக, மல்லிகாவின் தங்கை பேரன் கோகுல் அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து செல்லும் நிலையில், பாட்டி இறந்தது குறித்து அறிந்தும் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் மல்லிகாவை கொலை செய்ததை கோகுல் ஒப்புக்கொண்டுள்ளார்.
படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த கோகுல், பாட்டியிடம் செலவுக்கு பணம்கேட்டுள்ளார். பாட்டி பணம் கொடுக்காததால் நண்பருடன் சேர்ந்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். வீட்டின் வாடகை கட்ட வேண்டும் என பாட்டி மல்லிகாவிடம் 7ஆம் தேதி இரவு வீட்டிற்கு சென்று கோகுல் பணம் கேட்டதாகவும், அவர் தர மறுக்க, அதனால் ஆந்திரமடைந்த கோகுல், போதையில் இருந்த பாட்டியை அடித்துள்ளார். மல்லிகாவின் தலை சுவரில் அடித்து மயங்கியுள்ளார். பின்னர் அவரை மேலும் தாக்கி கொலை செய்ததாக கோகுல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும், படித்த இளைஞரான கோகுல் வேலைக்கு செல்லாமல் PUBJI விளையாட்டில் மூழ்கி போனதால் வீட்டில் வறுமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தனியாக இருந்த தனது பாட்டியை காசு கேட்டு கொடுக்காததால் அவரைக் கொன்றுள்ளார். மூதாட்டியை கொன்றதோடு, வீட்டிலிருந்த 13 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல் மற்றும் அவரது நண்பர் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே, 13 சவரன் நகை காணாமல் போன நிலையில், 5 சவரன் நகைக்கு மட்டுமே காவல்துறையினர் கணக்கு காண்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
newstm.in




