பைக் ஓட்டியதால் இளைஞர் கைது.. போலீசார் நடவடிக்கை.. நடந்தது என்ன?
பைக் ஓட்டியதால் இளைஞர் கைது.. போலீசார் நடவடிக்கை.. நடந்தது என்ன?

புத்தாண்டு இரவு கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், சாகசம் செய்தும் ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புத்தாண்டு தினத்தில் நள்ளிவில் வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதித்திருந்தது. இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இளைஞர், பைக்கில் அதிவேகமாகவும், வீலிங் செய்து சாகசத்திலும் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலானது. இந்த சம்பவம் குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மற்றும் அடையாளங்களை கொண்டு, தரமணியயைச் சேர்ந்த விஜயன் என்பவரை பிடித்தனர். விசாரணையில் விஜயன் தான் நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில், பைக்கில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டு, அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விஜயனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
newstm.in

