'UNCLE’ என அழைத்த இளம்பெண் மீது இளைஞர் கடும் தாக்குதல்.. நடந்தது என்ன? !!
'UNCLE’ என அழைத்த இளம்பெண் மீது இளைஞர் கடும் தாக்குதல்.. நடந்தது என்ன? !!

தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர், சிறுமிகள் அனைவரும் உறவுக்காரர்களையும் ‘Uncle’, 'aunt' என அழைக்கும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் இப்படி அழைப்பதால் சிறு பிரச்சனையை உண்டாகிறது என்பதற்கு ஒரு சம்பவம் உதாரணமாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையை மொஹித் குமார் (35) என்பவர் கவனித்து வருகிறது. இந்த நிலையில், கடைக்கு 18 வயது இளம்பெண் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். கடையில் பொருட்கள் வாங்க எண்ணிய அவர், கடைக்காரர் மொஹித் குமாரை ‘Uncle’ என அழைத்துள்ளார்.

இளம்பெண் தன்னை ‘Uncle' என அழைத்ததைக் கேட்டு ஆத்திரமடைந்த மொஹித் குமார் அந்த இளம்பெண்ணை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் அப்பெண் சரிந்து விழுந்தார். மேலும் இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தானாக முன்வந்து விசாரணையில் இறங்கினர். இளம்பெண்ணை தாக்கிய கடைக்காரர் மொஹித் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 323, 354 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், 18 வயது இளம்பெண், மொஹித் குமாரின் கடையில் பேட்மிண்டன் ராக்கெட் வாங்கியுள்ளார். அதன் ஸ்ட்ரிங் சில விடுபட்டிருந்த காரணத்தால் அதை மாற்ற மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் ‘Uncle’ என அழைத்த காரணத்தால் மொஹித் குமார் ஆத்திரமடைந்து அப்பெண்ணைத் தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது, எனத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

