நண்பர் என்றும் பாராமல் இளைஞர் வெறிச்செயல்.. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது !
நண்பர் என்றும் பாராமல் இளைஞர் வெறிச்செயல்.. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது !

தன்னுடன் பணிபுரிந்தவரின் மகளான சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் சஹ்னேவாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சில குடும்பத்தினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அத்தொழிற்சாலையில் 45 வயதான நபர் தனது குடும்பத்தோடு தங்கி பணிபுரிந்து வருகிறார். அவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அங்கு தங்கியிருக்கும் 30 வயதான மற்றொரு நபர் மகளை பள்ளியில் விட சொல்வார் .

வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போதெல்லாம் அந்த பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவர் அவருக்கு துணையாக இருப்பார் . இந்த நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 30 வயதான நபர் உள்ளே புகுந்துள்ளார். பின்னர் மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர். முன்னதாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார் .

ஆனால் அப்பெண் தன்னுடைய தந்தை வந்ததும் 30 வயது நபரால் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் .அதை கேட்டு கொதித்த தந்தை அங்குள்ள போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை விசாரித்து வருகின்றனர் . இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

