டெல்லியில் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர் கைது!!
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வன்முறையின் போது துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் ஒருவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியானது.

டெல்லி வன்முறையின் போது காவல்துறையை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர் ஷாரூக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வன்முறையின் போது துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் ஒருவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியானது. அந்த சம்பவம் எல்லோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் ஷாரூக் என தெரியவந்துள்ளது. ஷாரூக் மற்றும் அவரது உறவினரும், ஆம்ஆத்மி கவுன்சிலருமான தாஹிர் ஹுசைன் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். ஷாரூக் வீட்டில் டெல்லி போலீஸ் நடத்திய சோதனையில், வெடிபொருள்களை பறிமுதல் செய்ப்பட்டது. இதனையடுத்து ஷாரூக் உத்ததரப்பிரதேசம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
newstm.in