மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர்.. 43 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு..!
மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர்.. 43 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு..!

கேரளாவில், மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர் பாபு 43 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.
கேரள மாநிலம் மலம்புழாவைச் சேர்ந்தவர் பாபு. இவர், கடந்த 7-ம் தேதி நண்பர்களுடன் மலையேற்றத்திற்காக குரும்பச்சி சென்றபோது நடுவழியில் கால் இடறியதில் அவர் உருண்டு விழுந்து மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் விழுந்தார்.
உடனே அவரது நண்பர்கள் மீட்க முயன்றும் பயனளிக்கவில்லை. பின்னர், மலையில் இருந்து கீழே வந்த நண்பர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், ராணுவத்தின் உதவியை நாடினார். இந்நிலையில், உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்த இளைஞர் பாபு 43 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.
Next Story

