Theme Check

பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
X

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் தங்கை திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் இறந்துவிடவே, தங்கையின் இரண்டு பெண் குழந்தைகளையும் அவரது சகோதரி வீட்டிற்கு அழைத்து வந்து வளர்த்து வந்துள்ளார். இதில் மூத்த மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். மற்றொரு சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்த சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெரியம்மா ஒருநாள் அவரிடம் கேட்டுள்ளார்.

பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் லக்‌ஷ்மணன் என்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என கூறி உத்தரவிட்டார். இதனையடுத்து இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it