மோசடி புரோக்கரை காரில் கடத்திய இளைஞர்கள்!!
மோசடி புரோக்கரை காரில் கடத்திய இளைஞர்கள்!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை சிலர் கடத்தி சென்றதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட நபரின் மனைவியிடம் மர்ம நபர்கள் ரூ.20 லட்சம் கொடுத்துவிட்டு உனது கணவரை அழைத்து செல் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து கடத்தப்பட்ட நபரின் மனைவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் கடத்தப்பட்ட நபர் தி.நகர் பகுதியைச் சேர்ந்த ரவி (54) என்பது தெரியவந்தது. இதனையடுத்து மர்ம நபர்கள் அம்பத்தூர் வழியாக சென்றுக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சூரப்பட்டு அருகே கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை மடக்கி பிடித்தனர். 6 பேரை மடக்கி பிடித்து. கடத்திச் செல்லப்பட்ட ரவியை போலீசார் மீட்டனர். விசாரணையில், கடத்திய நபர்கள் நஸ்ருதீன் (26), அஜய்குமார்(23) உள்ளிட்டோர் என தெரியவந்தது.

வீட்டுப் புரோக்கரான ரவி அயனாவரத்தில் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு வீட்டை நஸ்ருதீன் என்பவருக்கு ரூ.8 லட்சத்துக்கும், அஸ்ரப் என்பவருக்கு ரூ.5 லட்சத்துக்கும், அஷோக் என்பவருக்கு ரூ.5 லட்சத்துக்கும் பெற்று தருவதாகக்கூறி அவர்களிடமிருந்து பணம் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார்.
மேலும் சம்மந்தபட இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்கள் கேட்டபோது அவ்விடம் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என பணம் வாங்கிக்கொண்டு ரவி ஏமாற்றிதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் பணத்தை திரும்பக்கொடுக்கும் படி கேட்டுள்ளனர். ரவி பணத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய வந்துள்ளார். நஸ்ருதீன் அயனாவரம் காவல் நிலையத்தில் ரவி மீது புகார் கொடுத்தார். போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நஸ்ருதீன் தனது நண்பரான வழக்கறிஞர் சுனில் என்பவரிடம் தனது பிரச்னையை சொல்ல, அவர் திட்டம் போட்டு அதன்படி ரவியை கடத்தியது தெரிய வந்தது.
ரவி மற்றும் அவரது மனைவி அமுதா மீது பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளன. ரவியை கடத்திய 6 நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் ரவி மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோரின் மோசடி குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
newstm.in

