Theme Check

தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கினார் ஒய்.எஸ். ஷர்மிளா !! தொண்டர்கள் மத்தியில் சபதம்

தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கினார் ஒய்.எஸ். ஷர்மிளா !! தொண்டர்கள் மத்தியில் சபதம்

தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கினார் ஒய்.எஸ். ஷர்மிளா !! தொண்டர்கள் மத்தியில் சபதம்
X

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று தெலங்கானாவில், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சிஎனும் புதிய கட்சியை தொடங்கினார்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநில முதல்வராக கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். அதன்பின்னர் 2009ல் நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் அவா் உயிரிழாந்தார்.

அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவக்கினார். 2019ல் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த தேர்தலில், ஓய்.எஸ்.ஆர். கட்சி பெரும்பான்மை பெற்றது. ஜெகன் மோகன் முதலமைச்சரானார். அந்த தேர்தலில், ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து ஷர்மிளா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி துவங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

அந்த வகையில், மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 72வது பிறந்தநாள் நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. புலிவேந்துலாவில் உள்ள இடுபுலபாயா ஒய்.எஸ்.ஆர் சமாதியில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இவரது தாயார் விஜயலட்சுமி, தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் அமைச்சர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வந்த விஜயலட்சுமி மற்றும் ஒய்.எஸ். ஷர்மிளா ஆகியோருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என தனது கட்சியின் பெயரை அறிவித்தார் ஒய்.எஸ். ஷர்மிளா. மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து ஒய்.எஸ்.ஷர்மிளா ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் ஆந்திராவின் பொற்காலம். தெலங்கானா மாநிலம் உருவானதில் இங்குள்ள மக்கள் இதற்கு முன் எப்படி இருந்தார்களோ அப்படியே உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. ஆனால், முதல்வர் கே. சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளது என குற்றம்சாட்டினார். வரும் தேர்தலில் தெலுங்கானாவில் எனது தந்தை கண்ட நல்லாட்சியான '' ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் தெலுங்கானா சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு போட்டியாக தனது கட்சியை வளர்த்திட ஷர்மிளா வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it