Theme Check

இணையும் இரண்டு ஜாம்பவான்கள் - ஒன்று சேர்ந்த ஜீ மற்றும் சோனி பிக்சர்ஸ்..!

இணையும் இரண்டு ஜாம்பவான்கள் - ஒன்று சேர்ந்த ஜீ மற்றும் சோனி பிக்சர்ஸ்..!

இணையும் இரண்டு ஜாம்பவான்கள் - ஒன்று சேர்ந்த ஜீ மற்றும் சோனி பிக்சர்ஸ்..!
X

ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சோனி இந்தியா நிறுவனம் ஒன்று சேர்ந்து செயல்பட உள்ளது. இதுகுறித்து விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்த இணைப்பின் மூலம் சோனி நிறுவனம் ரூ. 11,605.94 கோடி முதலீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக புனித் கோயன்கா இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் 47.07 விழுக்காடு பங்குகள் இருக்கும். மேலும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் 52.93 சதவீதம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துடன் சேர்ந்து டிவி வணிக மற்றும் டிஜிட்டல் சொத்துகள், உற்பத்தி நடவடிக்கைகள் ஆகியவை இணைக்கப்படுகின்றன.

செயல்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரிவுகளுக்கு இயக்குநர்களை நியமிக்கும் பொறுப்புகள் சோனி நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்குமான ஒப்பந்தம் 90 நாட்களில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
Next Story
Share it