Theme Check

திமுக ஆட்சி பற்றி ஜீயர் சடகோப ராமானுஜர் கருத்து.!

திமுக ஆட்சி பற்றி ஜீயர் சடகோப ராமானுஜர் கருத்து.!

திமுக ஆட்சி பற்றி ஜீயர் சடகோப ராமானுஜர் கருத்து.!
X

சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் மேயர் வேண்டுகோளை ஏற்று பெரம்பூர் பகுதியில் உள்ள சேமாத்தம்மன் கோயிலினை ஆய்வு செய்ததாக கூறியவர், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சில ஆக்கிரமிப்புகள் உள்ளது. கோவில் திருக்குளம் வற்றி யுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், சென்னை சேமாத்தமன் கோயிலில் உள்ள குளத்தை ரூ.70 லட்சம் செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் குறைபாடுகள் உள்ளதாக புகார் வந்ததால், அதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றார்.

முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தபோது, பட்டினப்பிரவேசம் குறித்து தொன்மையாக நடைபெறும் வழக்கம் இது என்று ஆதீனங்கள் குறிப்பிட்டனர். இதனை தொடர்ந்து முதல்வர் இதற்கு அனுமதி அளித்துள்ளார்.

இந்த ஆண்டு 1500 கோயில்களுக்கு 1000 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்த ஆய்வின் போது திருவில்லிப்புத்தூர் ஜீயரும் கோவிலுக்கு வந்தார். இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், திமுக ஆட்சியில் இந்துக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மேயர் பிரியா ராஜன், சென்னை 1 மண்டல இணை ஆணையர் ந.தனபால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலேகஸ்ரீசடகோப ராஜாமானுஜர் ஜீயர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் கலந்து் கொண்டனர்.

Next Story
Share it