கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ்..
கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ்..

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு சுகாதாரக் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2ஆவது அலை உச்சத்தை தொண்டு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா குறைந்து வருகிறது. எனினும் கருப்பு பூஞ்சை மற்றும் ஜிகா வைரஸ் நாடு முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியது. இதில் ஜிகா வைரஸ் பெரும் அச்சத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

ஜிகா வைரஸ் முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டது. அங்கு ஜிகா கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்ற மாநிலங்களிலும் ஜிகா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேவில் பெல்சார் என்ற கிராமத்தில் 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தொற்று அறிகுறிகள் இருக்கின்றனவா என்பது குறித்த சோதனைகளை மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஜிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.

ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்தே பெல்சார் கிராமத்தில் பலருக்கும் காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதில் 21 வயதான ஒருவருக்கு டெங்குவும், 50 வயதான பெண்ணுக்கு ஜிகா வைரஸும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
newstm.in

