அடக்கொடுமையே! கணவன் சாப்பிட வராததால் தீக்குளித்த மனைவி!!
அடக்கொடுமையே! கணவன் சாப்பிட வராததால் தீக்குளித்த மனைவி!!

சாப்பிட அழைத்த போது கணவன் கண்டுகொள்ளாததால் ஆத்திரத்தில் மனைவி தீக்குளித்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த தேவராஜ் – மேகலா தம்பதிக்கு பூர்ணிமாதேவி என்ற மகளும், நவீன்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.
தேவராஜுக்கும், மேகலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. இந்நிலையில் வழக்கம் போல வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்காக தேவராஜை மேகலா அழைத்திருக்கிறார்.
![food]](https://newstm.in/static/c1e/client/77058/uploaded/c4b990803b8b4f14ce4011eb644a03b6.jpg)
ஆனால் அதனை தேவராஜ் பொருட்படுத்தாமல் இருந்ததால் மேகலா கடுமையான கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார். இதனையடுத்து அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் அலறிய மேகலாவை கண்டதும் அவரை காப்பாற்ற முயன்ற தேவராஜுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

