Theme Check

அடக்கொடுமையே! நாய்க்கு உணவளித்த பெண்ணுக்கு ரூ.8 லட்சம் அபராதம்!!

அடக்கொடுமையே! நாய்க்கு உணவளித்த பெண்ணுக்கு ரூ.8 லட்சம் அபராதம்!!

அடக்கொடுமையே! நாய்க்கு உணவளித்த பெண்ணுக்கு ரூ.8 லட்சம் அபராதம்!!
X

மும்பையில் தெருநாய்களுக்கு உணவளித்ததால் பெண் ஒருவருக்கு ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் என்.ஆர்.. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பைச் சேர்ந்த அன்சு சிங் என்பவருக்கு தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர் குடியிருப்பில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு உணவு அளித்துள்ளார். ஆனால் இந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி உணவு வழங்கினால் ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

dog 1

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத அன்சு சிங், தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார். இதற்காகத் தினமும் இவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது.

இப்படி கடந்த ஜூலை மாதம் முதல் அபராதம் விதிக்கப்பட்டு வந்ததில் தற்போது ரூ. 8 லட்சம் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் இதே குடியிருப்பைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it