அடேங்கப்பா! கழுதை வளர்த்தால் ஒரு ஆர்டர் ரூ.17 லட்சம்!!
அடேங்கப்பா! கழுதை வளர்த்தால் ஒரு ஆர்டர் ரூ.17 லட்சம்!!

கர்நாடகாவைச் சேர்ந்த கழுதைப்பண்ணை உரிமையாளருக்கு ஒரு ஆர்டர் மூலம் மட்டும் 17 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.
ஸ்ரீவாஸ் கவுடா என்பவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்து இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கழுதைப்பண்ணையை தொடங்கியுள்ளார். மங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இந்த கழுதைப்பண்ணையில் இனப்பெருக்க மையத்தையும் அமைத்துள்ளார்.
பிஏ பட்டதாரியான இவர் பண்ணைகள், விவசாயம், கால்நடை பராமரிப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையம் போன்ற பல தொழில்களை பார்த்துவிட்டு தற்போது கழுதை பண்ணை தொழிலில் இறங்கியுள்ளார்.

2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்தில் சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆட்டுப்பண்ணையை தொடங்கிய கவுடா, அங்கேயே முயல்கள் மற்றும் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். தற்போது அங்கே 20 கழுதைகளை வளர்த்து வருகிறார்.
கழுதைப்பாலில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. 30மி.லி கழுதைப்பாலின் விலை ரூ.150. அடுத்த மாதத்திலிருந்து சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் மற்றும் கடைகளுக்கும் கழுதைப்பாலை விநியோகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைத்துள்ளது.
newstm.in

