Theme Check

அடேங்கப்பா! ரூ.50 லட்சம் பரிசு! அரசு அதிரடி அறிவிப்பு!

அடேங்கப்பா! ரூ.50 லட்சம் பரிசு! அரசு அதிரடி அறிவிப்பு!

அடேங்கப்பா! ரூ.50 லட்சம் பரிசு! அரசு அதிரடி அறிவிப்பு!
X

இந்தியா முழுவதும் கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த அலை நகரங்களை மட்டுமல்ல கிராமங்களையும் பதம் பார்த்துள்ளது. இதனால் பாதிப்புக்களின் அடிப்படையில் கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் கிராமங்களில் கொரோனா பரவல் குறித்து காணொலி காட்சி மூலம் கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் உரையாற்றினார். அதில் பாதிப்புக்களை கட்டுப்படுத்த கிராமங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் “எனது கிராமம் கொரோனா இல்லாத கிராமம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் படி வெற்றிபெறும் கிராமங்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின் விளக்கம் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது கிராமம், கொரோனா இல்லாத கிராமம்” திட்டத்தின் ஒரு பகுதியாகும். கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பாக பணிபுரியும் தலா 3 கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

முதல்பரிசாக ரூ.50 லட்சமும், 2வது பரிசாக ரூ.25 லட்சமும், 3வது பரிசாக ரூ.15 லட்சமும் வழங்கப்படும். மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 6 வருவாய் மண்டலங்களில் 18 பரிசுகள் வழங்கப்படும். வெற்றிபெறும் கிராமங்களுக்கு பரிசுத்தொகைக்கு இணையான கூடுதல் ஊக்கதொகையும் வழங்கப்படும். இந்த தொகையை கிராமத்தின் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வெற்றியை தீர்மானித்து தீர்ப்பு வழங்க கமிட்டிகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்..

Tags:
Next Story
Share it