Theme Check

அடேங்கப்பா!! 1,000 ஆண்டுகள் உடையாமல் இருக்கும் கோழி முட்டை.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு !!

அடேங்கப்பா!! 1,000 ஆண்டுகள் உடையாமல் இருக்கும் கோழி முட்டை.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு !!

அடேங்கப்பா!! 1,000 ஆண்டுகள் உடையாமல் இருக்கும் கோழி முட்டை.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு !!
X

1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யவ்னே செஸ்பிட் நகரில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அண்மையில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டையை கண்டுபிடித்துள்ளனர். பைசண்டைன் காலத்து தொழில்துறை வளாகத்திலிருந்து இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டை ஒரு பழங்கால கழிவுநீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும், அப்போது மனித மலத்தால் சூழப்பட்டிருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த கழிவுநீர் தொட்டியில் காப்டிக் பொம்மைகள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய காலத்து எலும்பு பொம்மைகளின் தொகுப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டை சுமார் ஆறு சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக இருக்கிறது. மேலும் அதன் ஓட்டில் சில விரிசல்கள் இருந்தன. தற்போது இந்த முட்டை பகுப்பாய்வுக்காக ஐ.ஏ.ஏ இன் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. ‘

இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக உடையாமல் இருப்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். எனினும் விரிவான ஆய்வுக்கு பின்னரே முழுமையான தகவல்கள் வெளிவரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it