அடேங்கப்பா!! 100க்கு 200, 300 மார்க் பெற்ற மாணவர்கள்.. பல்கலைக்கழக தேர்வால் சர்ச்சை !
அடேங்கப்பா!! 100க்கு 200, 300 மார்க் பெற்ற மாணவர்கள்.. பல்கலைக்கழக தேர்வால் சர்ச்சை !

பல்கலைக்கழக தேர்வில் 100க்கு தேர்வு நடத்தி மதிப்பெண்களை 200, 300 என வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் படிக்கும் போது ஒருசில மாணவர்கள் தேர்ச்சி பெற ஒரிரு மதிப்பெண்கள் வேண்டும் என்ற நிலையில் சில ஆசிரியர்கள் அதற்கு உதவுவர். அதனையெல்லாம் கடந்து இப்போது ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களே முறைகேட்டில் ஈடுபடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.
இதுவரை பள்ளி, கல்லூரிகளில் நடந்த இதுபோன்ற முறைகேடுகள் நடந்த நிலையில், தற்போது பிரபல பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுததியுள்ளது.

மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சமீபத்தில் எம்.எட்., தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் 100 மதிப்பெண் கொண்ட தேர்வுக்கு 138, 151, 367 என்று சில மாணவர்கள் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதுவரை வரலாற்றில் எந்த ஒரு பல்கலைக்கழக தேர்வு முடிவும் இதுபோன்று வராத நிலையில், எப்படி இந்த தவறு நடைபெற்றது என்று அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும், தேர்வு முடிவுகள் அனைத்தும் மீண்டும் சரி செய்யப்படும் என்றும், தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் மதிப்பெண் கொண்ட தேர்வுக்கு 138, 151, 367 என்று மதிப்பெண் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

