அடேய் தம்பி… இதுக்கெல்லாமாடா டிவியை உடைப்பாங்க..?
அடேய் தம்பி… இதுக்கெல்லாமாடா டிவியை உடைப்பாங்க..?

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருவையா. இவரது மனைவி புஷ்பலதா. இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
அங்கு, டிவியில் ஒளிபரப்பான ‘தூக்குடு’ என்ற தெலுங்கு படத்தை பிரபல நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகனான குருவையாவின் 7 வயது மகன் விராட் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘தூக்குடு’ படத்தின் ஒரு சண்டைக் காட்சியில், படத்தின் ஹீரோவான தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, படத்தின் வில்லன் சோனு சூட்டுவை அடித்து துவம்சம் செய்வது போல் காட்சிகள் அமைந்துள்ளது. தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடி வாங்குவதை விராட்டால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து மகேஷ் பாபு சோனு சூட்டுவை அடித்துக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றான் சிறுவன் விராட். ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த அவன், வீட்டுக்கு வெளியே ஓடிச் சென்று கல் ஒன்றை எடுத்து வந்த விராட், “என் தலைவனையாடா நீ அடிக்கிற..? உன்னை என்ன செய்றேன் பாரு..!” எனக் கூறியபடியே மகேஷ் பாபுவை நோக்கி கல்லை வீசினான்.
இதனால், டிவி உடையும் சத்தம் கேட்டதும் உறவினர்கள் விரைந்து வந்தனர். அதன்பிறகு தான் சிறுவன் சோனு சூட்டுக்காக டிவியை உடைத்தது தெரியவந்தது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான செய்தியை சிலர் நடிகர் சோனு சூட்டுவின் ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளனர்.இதனை பார்த்த சோனு சூட், “இதுபோன்று டிவியை உடைக்க வேண்டாம். பிறகு, உங்கள் தந்தை என்னிடம்தான் புதிய டிவி வாங்கிக் கொடுக்கச் சொல்லுவார்” என, தனது ரசிகனான சிறுவன் விராட்டுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

