கதறி அழும் நடிகை யாஷிகா.. பதறிய ரசிகர்கள் - வீடியோ !
கதறி அழும் நடிகை யாஷிகா.. பதறிய ரசிகர்கள் - வீடியோ !

தமிழ் திரையுலகில் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். சமூக வலைதள பக்கங்களில் பெரும் ஆர்வம் கொண்ட இவர் இங்கும் கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை பின்தொடர வைத்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார் விபத்து ஒன்றில் சிக்கினார். படுகாயமடைந்த அவர் உயிர்தப்பி மறுபிறவி எடுத்துள்ளார். இந்நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகாமாக வந்த யாஷிகாவின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் உடல்நிலை சரியாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீடு திரும்பினார் யாஷிகா. தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுவதை போல் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதவில் நண்பர்களுடன் கதறி அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதுக்கு இப்படி கும்பலா சேர்ந்து அழுறீங்க, தோழியை நினைச்சி அழுறீங்களா என கேட்டு வருகின்றனர். மேக்கப் இல்லாத தனது முகத்தை பார்த்து அழுவதை போன்ற ஜாலியான வீடியோவையே யாஷிகா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலரும் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in

