Theme Check

செல்பி மோகம்.. 4 பேர் உயிர் பறிபோன விபரீதம் !!

செல்பி மோகம்.. 4 பேர் உயிர் பறிபோன விபரீதம் !!

செல்பி மோகம்.. 4 பேர் உயிர் பறிபோன விபரீதம் !!
X

நவீன மயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் மனிதனுடைய வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்டது செல்போன். உலக நிகழ்வுகளை, நாம் விரும்பியவற்றை உள்ளங்கைக்குள் அடக்குகிறது. செல்போன் முதலில் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஸ்மார்ட் போன் அறிமுகமான பின், குட்டி கம்ப்யூட்டராக செயல்பட்டு வருகிறது.

செல்போனில் வீடியோ, போட்டோ எடுக்கும் வசதி இருப்பதால் அதை பயன்படுத்துபவர்கள், கண்டிராத பிரமிப்பான இடங்களை தங்களது செல்போனுக்குள் வளைத்துப் போட்டுக்கொள்வார்கள்.

selfi

அந்த வகையில் மோகத்தின் அடிப்படையில் உருவானது தான் செல்வி. சமீப காலமாக செல்பி என்ற மோகம் செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிகரித்து வருகிறது. சிலர் தங்களை மற்றவர்களிடம் பெருமையாக காட்டிக் கொள்வதற்காக ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்கிறார்கள்.

மலையின் உச்சிப்பகுதி, நீர்வீழ்ச்சி, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றங்கரையோரம், ஓடும் ரயில் முன்பாக நின்று ஆபத்தான இடத்தில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்கிறார்கள். அப்போது கவனக்குறைவால் உயிரிழப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

selfi

அதேபோல்தான் செல்பி மோகம் இமாச்சல பிரதேசத்தில் இன்று நான்கு பேர் உயிரை பறித்துள்ளது. அம்மாநிலத்தின் குலு மாவட்டம் பஹாங் என்ற இடத்தில் ஓடும் ஆற்றக்கரையோரம் நின்று அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செல்பி மோகத்தால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it