தங்கம் வாங்கலையோ தங்கம்..? இன்று சவரனுக்கு 248 ரூபாய் குறைந்தது..!!
தங்கம் வாங்கலையோ தங்கம்..? இன்று சவரனுக்கு 248 ரூபாய் குறைந்தது..!!

உலகத்திலேயே அதிகமாக தங்கம் வாங்கும் நாடு நம் இந்தியா தான். நம் நாட்டு பெண்கள் தங்கம் மீது வைத்திருக்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா காலத்திலும்கூட இந்தியர்களுக்கு தங்கத்தின் மோகம் குறையவில்லை. தங்கத்தின் விலை அண்மையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லபடுகிறது.
தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கும் தங்கம் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,048-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, ரூ.4,881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல் ரூ.70,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.