Theme Check

தமிழ்த்தாய் வாழ்த்து… தேசிய கீதம்: தமிழக அரசு புதிய உத்தரவு..!

தமிழ்த்தாய் வாழ்த்து… தேசிய கீதம்: தமிழக அரசு புதிய உத்தரவு..!

தமிழ்த்தாய் வாழ்த்து… தேசிய கீதம்: தமிழக அரசு புதிய உத்தரவு..!
X

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக, அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுகிறது. இதனால், விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

மேலும், எவ்வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது.

எனவே, இனிவரும் காலங்களில் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக, விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் - தமிழக அரசு புதிய உத்தரவு..!

Next Story
Share it